மெர்சல் திரைப்படம் முதல் நாளே வெளியிடப்படும் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்.!
மெர்சல் திரைப்படம் முதல் நாளே வெளியிடப்படும் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்.! நடிகர் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'மெர்சல்'. சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், உலகளவில் அதிக லைக்குளை பெற்றிருந்த விவேகம் படத்தின் டீஸர் சாதனைனையும் 'மெர்சல்' படம் முறியடித்தது. இந்நிலையில், மெர்சல்' படம் வெளியான முதல் நாளே அதன் தெளிவான விடியோ அடங்கிய முழுப் படமும் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இணையத்தில் திரைப்படங்களை வெளியிடும் நபர்களையும், தளங்களையும் முடக்கப்போவதாக தெரிவித்த நடிகர் விஷாலின் திரைப்படமான துப்பறிவாளன், வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.