Posts

Showing posts from June, 2018

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!

Image
ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியானது நேற்று இரவு மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக பல்வேறு கலை, நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதற்கு நடுவர்களாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட் நட்சத்திரங்கள் மலைகா அரோரா, பாபி தியோல், குனால் கபூர் ஆகியோர் செயல்பட்டனர். அதில் 2018 ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை 19 வயதான தமிழ்நாட்டுப் பெண் அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார். அம்மாவுடன் தனியே வளர்ந்த அனு, சென்னை லயோலா கல்லூரியில், தற்போது பிரெஞ்சு மொழியில் பி.ஏ. படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடனம், டிரைவிங் உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கிவருபவராம் அனு. மிஸ் இந்தியா பட்டம் வென்றதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேல்டு பட்டத்திற்கான போட்டியிலும் அனு இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார் ...

நிலமே எங்கள் உரிமை.. உரிமையை மீட்போம் - காலா திரை விமர்சனம்.!

Image
நடிப்பு : ரஜினிகாந்த், ஹிமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ்,  இசை : சந்தோஷ் நாராயணன்  இயக்கம் : பா.ரஞ்சித்  ஒளிப்பதிவு : முரளி.ஜி  சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் - மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு கிடக்கிற மக்களின் வாழ்வியல் சூழல்களை, பொதுப்புத்தியில் பதிந்திருந்த அவர்கள் குறித்த சித்திரங்களை கடந்து அவர்களின் வாழ்க்கை முறையினை, கொண்டாட்டங்களை எப்போதும் தனது கதைகளின் வழி அப்பட்டமாக பதிவு செய்கிறவர் இயக்குனர் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அவரின் திரைப்படங்கள் தொடர்ச்சியான பெரு வெற்றியை பெற்றவண்ணமே இருந்தாலும் ரஜினியுடன் ரஞ்சித் இணைந்திடும் இரண்டாவது படம் இது என்பதால் ரசிகர்களின் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் கிளம்பியிருந்தது. அவ்வப்போது வெளியிடப்பட்ட பாடல்களும் ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகப்படியாக தூண்டியிருந்தன. காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு என சில விவகாரங்களில் ரஜினி தெரிவித்த கருத்து அவருக்கு எதிராக கிளம்பிய நிலையில்தான் காலா வெளியாகியுள்ளது. மும்பை, தாராவி பகுதியில் வாழ்ந்துவருபவர் காலா. ...

''இயற்கையை காப்போம்''- உலக சுற்றுச் சூழல் தினம் - ஜூன் 05.!

Image
ஒவ்வோர் வருடமும் சூன் 05 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப் படுகிறது. புவியையும் அதன் இயற்கைத் தன்மையையும் காக்கும் பொருட்டு, உலகளாவிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவே கடந்த 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் துவங்கிவைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. நாம் வாழ்ந்து வருகிற புவி குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிறிதேனும் நாம் சிந்தித்திடாத காரணத்தால்தான் ஐ.நா சபையால் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் மனிதனுக்கு மட்டுமானதல்ல இந்த உலகம் என்பதனை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளல் வேண்டும். மாறாக சிறு சிறு சீவராசிகளுக்கும் ,புல் பூண்டுக்கும் சொந்தமானது இந்த உலகம். இதனை மறந்து தனது நலனுக்காக தொழிற்சாலைகள்,அறிவியல் தொழில்ஙட்பங்களைக் கொண்டு என்று இயற்கையின் வளங்களை மனிதன் அதிகப்படியாக சுரண்டத் துவங்கினானோ, அப்போது மாறத்துவங்கியவைதான் இயற்கையின் காலநிலைகள் இதன் காரணமாகவே உலகு முழுமைக்கும் சுனாமி, நிலநடுக்கம் எரிமலைச் சீற்றம் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அரங்கேறிவருகின்றன. நகரமயமாக்கல் எனும் பெயரால் மரங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே...