Posts

Showing posts from October, 2017

கேரள அரசின் அடுத்த அதிரடி.. தலித், ஹரிஜன் வார்த்தைகளை பயன்படுத்த தடை.!

Image
கேரள அரசின் அடுத்த அதிரடி.. தலித், ஹரிஜன் வார்த்தைகளை பயன்படுத்த தடை.! பிறப்பால் உயர்வு, தாழ்வு பாராட்டுதல் குற்றம் என்பது மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் அச்சடிப்பட்டிருக்கிறதே தவிர,  அதனை நடைமுறையில் செயற்படுத்த இடதுசாரிகள், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் இன்னும் பல முற்போக்கு இயக்கங்களைத் தவிர வேறெந்த தேர்தல் அரசியல் கட்சிகளும் முனைந்ததாக தெரியவில்லை. அந்த வகையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கலாம் என்ற சட்டத்தினை நிறைவேற்றிய திமுகவின் சட்டத்தினையும் கூட முடக்கினர் சாதிய மனோபாவமுள்ள அமைப்பினர். இந்த நிலையில், மத்தியில் இந்துத்துவ பாஜக அரசு அமைந்து தொடர்ச்சியாக மதக்கொள்கைகளை திணித்து வருகிற சூழலில், கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையில் அமைந்துள்ள இடதுசாரிகளின் அரசு பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த 36 நபர்களை அர்ச்சகர்களாக்கி அதிரடி காட்டியது மட்டுமின்றி, தேசத்திற்கே முன்னுதாரணமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கேரள அரசு சார்பில் அதிகாரபூர்வமாக தலித், ஹரிஜன் போன்ற சொற்களை பயன்படுத்தக்கூடாதென அறிவிக்கப...

அண்ணன் திருமா வராமல் உணவருந்த மாட்டேன்.. திருமணத்தில் ஈழத்தமிழர் நெகிழ்ச்சி.!

Image
அண்ணன் திருமா வராமல் உணவருந்த மாட்டேன்.. திருமணத்தில் ஈழத்தமிழர் நெகிழ்ச்சி.! தமிழகம் கண்ட அரசியல் ஆளுமைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவர். ஆண்டாண்டு காலமாக சாதியின் காரணமாகவும், மதத்தின் காரணமாகவும் ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களின் உரிமைக்குரலாய் வெடித்துக்கிளம்பியவர் அவர். ஒடுக்கப்பட்ட ஏழை - எளிய மக்களின் மீது நடத்தப்படுகிற சாதிய வன்கொடுமைகள் மீது சவுக்கெடுத்து சுழற்றியவர். அந்த மக்களுக்காக தன் அரசு பணியை துறந்தவர். திருமணம் செய்துகொள்ள மறுத்து தொடர்ச்சியாக களமாடி வருபவர். ஈழ விடுதலை, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி களமாடி வரும் திருமா தீவிர ஈழ ஆதரவாளர்களுள் ஒருவர். கடந்த 2002ல் 'மானுடத்தின் தமிழ்க்கூடல்' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவார், மேலும் தமிழ்த்தேசிய தலைவரின் அன்பினை பெற்றவர். அப்படியான திருமா, ஈழ மக்களின் பெரும் அன்புக்கும் உரியவர். அவர் கலந்துகொள்ளாமல் தனது திருமணத்தில் உணவருந்த மாட்டேன் என தெரிவித்து காத்திருந்தார். இயக்குனர் சீனு ராமசாமி அவர...

கருவறைக்குள் முதல் தலித் அர்ச்சகர் ; சாதித்த கேரள அரசு.!

Image
கருவறைக்குள் முதல் தலித் அர்ச்சகர் ; சாதித்த கேரள அரசு.! மானுடம் இங்கே சாதியத்தினாலும், மதத்தினாலும் மாசு படுத்தப்பட்டுக்கொண்டிருக்கையில் அதன் வழியாகவே எளிய மனிதர்கள் மீது சுமத்தப்படுகிற இழிவுகளை துடைத்தெறிவதற்கான முதல் படியினை துவங்கியுள்ளது கேரளத்தினை ஆண்டுவருகிற பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகளின் அரசு. ஆண்டாண்டு காலம் சாதி, மதமென கூறி ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை கோவிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்திடும் மனிதர்களாக மாற்றிக்கொண்டுள்ளது, இறை - மத நம்பிக்கை அற்ற இடதுசாரிகளின் அரசு. காரணம் எந்த தளத்திலும் மக்களை பிறப்பின் வழி பாகுபடுத்தப்படக்கூடாது என்ற கொள்கையின் வெளிப்பாடுதான். கேரளாவில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ் இயங்கும் சபரி மலை ஐயப்பன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த வாரம் பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், திருவில்லா அருகே ...