நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை.!
நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை.!
பெங்காலி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காஞ்சனா மொயித்ரா. கடந்த செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பியிருக்கிறார். அவரை வழிமறித்த மூன்று பேர் நடிகையிடம் தவறாக நடக்க முயன்றிருக்கின்றனர். அங்கிருந்து தப்பிய நடிகை காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக இருவரை கைதுசெய்துள்ளனர் போலீசார்.
முன்னதாக, கேரள நடிகை பாவனா இதே போன்று காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு அரசுகள் உரிய பாதுகாப்பு அளிக்கின்றனவா என்ற கேள்வி எல்லோர்க்கும் எழாமல் இல்லை.


Comments
Post a Comment