Posts

சீமானின் எதிர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல ; ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கும் அமீர்.!

Image
இத்தனை ஆண்டுகாலம் இந்த மண்ணில் திராவிடத்தின் பெயரால் பிற மொழியாளர்களும், திரைத்துறை சார்ந்த நடிகர்களும் - நடிகைகளும் ஆட்சி செய்தது போதும். எங்கள் மண்ணுக்கு தொடர்பில்லாதவர்களிடம் ஆட்சி - அதிகாரத்தினை கையளித்ததன் விளைவாகத்தான் தமிழகம் இன்று எண்ணற்ற இன்னல்களில் சிக்கித்தவிக்கிறது. கூப்பிடு தூரத்தில் எம் தமிழினம் கொன்றொழிக்கப்பட்டபோதும் நாங்கள் கையாலாகாதவர்களாகி நின்றோம். இனியும் இங்கே பிற மொழியாளர்களின், திரைக்கவர்ச்சியை கொண்டு ஆட்சியை பிடிக்க முயலும் நடிகர்களின் ஆட்சி அமைந்திட விடமாட்டோம் என தெரிவித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பிற மொழியாளர்கள் இங்கே எங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழலாம் ; ஆனால், எங்களின் தார்மீக உரிமையாம் தலைமையேற்கும் அதிகாரத்தினை எவருக்கும் விட்டுத்தர முடியாது என அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கு காட்டமான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகையை தொடர்ச்சியாக சீமான் எதிர்த்துவருவது குறித்து சீமானின் நண்பரும், திரைப்பட இயக்குனருமான அமீரிட

சபரிமலை கோவில் மூழ்கியது ஏன் ; குருமூர்த்தியின் அடடே காரணம்.!

Image
கேரளாவில் இதுவரை வரலாறு காணாத அளவில் அதிகப்படியான மழை பெய்துவருகிற காரணத்தினால் இதுவரையில் சுமார் 324 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தினாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கோவில் மழை நீரில் மூழ்கியுள்ளதனை போன புகைப்படங்கள் சில வெளியாகின. இந்த நிலையில், கேரளாவில் மழை பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய சூழலில், பாஜக மேலிடத்துடன் தொடர்புடைய நபராக அறியப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி என்பவர் சமீபத்தில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்கும் அனுமதியாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய காரணத்தினாலேயே சபரிமலை கோவில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என தமது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை கிளப

கவிதைத்தாயின் அன்பு மகனுக்கு இன்று பிறந்தநாள்.!

Image
நா. முத்துக்குமார் என்ற பெயரை அறிந்திடாத திரை ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது என்றே நாம் எத்தனிக்கலாம். காரணம், கண்ணியம் குறைந்திடாத தனது கவித்துவ வரிகளால் தமிழ் சினிமா துறையையும் அதன் ரசிகர்களையும் நெடுநாட்கள் கட்டியாண்ட காந்தம் முத்துக்குமார் என்ற பெயர். காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் 12 சூலை 1975ல் பிறந்த முத்துக்குமார் தனது நான்காவது அகவையில் தாயை இழந்தவர். தந்தையிடமிருந்து வாசிப்பு பழக்கம் முத்துகுமாரையும் விட்டுவைக்கவில்லை. விளைவு வீடே நூலகமாகிப்போனது - வாசிப்பே சுவாசமாகிப்போனது. இயக்குனராக வேண்டுமென திரைப்பட துறைக்குள் நுழைந்தவருக்கு காலம் கையளித்து சென்றது கவிஞன் என்ற பட்டத்தை. ஆம், திரைப்பட பாடல்களில் கவித்துவத்தினை, காதல் உணர்வினை குழைத்து ரசிகர்களை மதிமயங்க செய்த சாகசத்துக்கு சொந்தக்காரராகிப்போனார் முத்துக்குமார். கிரீடம் மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ள முத்துக்குமார், சுமார் 1500 படங்களுக்கு மேல் பாடல் எழுதியுள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் உள்ளிட்ட இவரது

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!

Image
ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியானது நேற்று இரவு மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக பல்வேறு கலை, நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதற்கு நடுவர்களாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட் நட்சத்திரங்கள் மலைகா அரோரா, பாபி தியோல், குனால் கபூர் ஆகியோர் செயல்பட்டனர். அதில் 2018 ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை 19 வயதான தமிழ்நாட்டுப் பெண் அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார். அம்மாவுடன் தனியே வளர்ந்த அனு, சென்னை லயோலா கல்லூரியில், தற்போது பிரெஞ்சு மொழியில் பி.ஏ. படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடனம், டிரைவிங் உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கிவருபவராம் அனு. மிஸ் இந்தியா பட்டம் வென்றதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேல்டு பட்டத்திற்கான போட்டியிலும் அனு இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்

நிலமே எங்கள் உரிமை.. உரிமையை மீட்போம் - காலா திரை விமர்சனம்.!

Image
நடிப்பு : ரஜினிகாந்த், ஹிமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ்,  இசை : சந்தோஷ் நாராயணன்  இயக்கம் : பா.ரஞ்சித்  ஒளிப்பதிவு : முரளி.ஜி  சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் - மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு கிடக்கிற மக்களின் வாழ்வியல் சூழல்களை, பொதுப்புத்தியில் பதிந்திருந்த அவர்கள் குறித்த சித்திரங்களை கடந்து அவர்களின் வாழ்க்கை முறையினை, கொண்டாட்டங்களை எப்போதும் தனது கதைகளின் வழி அப்பட்டமாக பதிவு செய்கிறவர் இயக்குனர் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அவரின் திரைப்படங்கள் தொடர்ச்சியான பெரு வெற்றியை பெற்றவண்ணமே இருந்தாலும் ரஜினியுடன் ரஞ்சித் இணைந்திடும் இரண்டாவது படம் இது என்பதால் ரசிகர்களின் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் கிளம்பியிருந்தது. அவ்வப்போது வெளியிடப்பட்ட பாடல்களும் ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகப்படியாக தூண்டியிருந்தன. காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு என சில விவகாரங்களில் ரஜினி தெரிவித்த கருத்து அவருக்கு எதிராக கிளம்பிய நிலையில்தான் காலா வெளியாகியுள்ளது. மும்பை, தாராவி பகுதியில் வாழ்ந்துவருபவர் காலா. மனைவி செல்வி (ஈஸ்வர

''இயற்கையை காப்போம்''- உலக சுற்றுச் சூழல் தினம் - ஜூன் 05.!

Image
ஒவ்வோர் வருடமும் சூன் 05 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப் படுகிறது. புவியையும் அதன் இயற்கைத் தன்மையையும் காக்கும் பொருட்டு, உலகளாவிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவே கடந்த 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் துவங்கிவைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. நாம் வாழ்ந்து வருகிற புவி குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிறிதேனும் நாம் சிந்தித்திடாத காரணத்தால்தான் ஐ.நா சபையால் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் மனிதனுக்கு மட்டுமானதல்ல இந்த உலகம் என்பதனை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளல் வேண்டும். மாறாக சிறு சிறு சீவராசிகளுக்கும் ,புல் பூண்டுக்கும் சொந்தமானது இந்த உலகம். இதனை மறந்து தனது நலனுக்காக தொழிற்சாலைகள்,அறிவியல் தொழில்ஙட்பங்களைக் கொண்டு என்று இயற்கையின் வளங்களை மனிதன் அதிகப்படியாக சுரண்டத் துவங்கினானோ, அப்போது மாறத்துவங்கியவைதான் இயற்கையின் காலநிலைகள் இதன் காரணமாகவே உலகு முழுமைக்கும் சுனாமி, நிலநடுக்கம் எரிமலைச் சீற்றம் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அரங்கேறிவருகின்றன. நகரமயமாக்கல் எனும் பெயரால் மரங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே

எஸ்.வி சேகரும்.. சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களும் - ஜனநாயகமும் ஒரு பார்வை.!

Image
தூத்துக்குடி மக்களும் - எஸ்.வி சேகரும் : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் கடந்த சில நாட்களாவே பரபரத்து கிடக்கிறது தமிழகம். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக 13 அப்பாவி பொதுமக்களை காவல்துறை காக்கை குருவிகளை சுட்டுக்கொல்வதைப்போன்று கொன்றொழித்ததை இன்னமும் நம்மால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையும் அங்கு எழவேயில்லை. அப்படியிருக்க சமூக நல்லிணக்கத்தினை காப்பதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விளக்கம் வேறு அளித்திருக்குகிறது தமிழக அரசு. இங்கே நாம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை, நடிகர் எஸ்.வி சேகரின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவுடன் பொருத்திப்பார்க்க விரும்புகிறோம். பொருத்தப்பாடு சரியில்லை என்பது நிஜமேயானாலும் இந்தியாவில் நிலவும் ஜனநாயகத்தை தோலுருத்து காட்டும் இந்த ஒப்புமை. அம்மணமாகும் ஜனநாயகம் : பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி சேகரை கைது செய்ய நீதிதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கை பிசைந்து நிற்கும் காவல்துறை, தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் நச்சு ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத