Posts

Showing posts from March, 2018

மழலை மொழி பேசும்.. திராவிடத் தலைவர் கலைஞர் ; மீண்டு வா எங்கள் சூரியனே.!

Image
தமிழகத்தின் அரசியல் வரலாற்றினை நாம் எழுதுவோமேயானால் திமுக தலைவர் கலைஞரை தவிர்த்து விட்டு ஒருபோதும் நம்மால் தமிழக வரலாற்றினை எழுதிட முடியாது. தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் பிறந்து, தனது அயராத உழைப்பினால் தமிழக வரலாற்றினையே எழுதியவர் அவர். ஆம், எதிர்ப்போரும் தவிர்த்து விட முடியாத ஆளுமை அவர். வயது முதிர்ச்சியினால் தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி ஓய்வெடுத்து வ்ருகிற கலைஞரின் உடல்நிலை மெல்ல சீராகி வருகிறது. இந்நிலையில், திமுக கட்சி நிர்வாகி ஒருவரின் குழந்தைகள் திமுக தலைவர் கலைஞருடன் பேசும் காணொளி காட்சி வெளியாகி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்த வீடியோவில்,  சிறுமியிடம் `நான் யார்’ என்று சைகையில் கேட்கிறார் கருணாநிதி. அந்தச் சிறுமி `கலைஞர் கருணாநிதி’ என்று பதில் சொல்கிறது. பின்னர் சிறுமியைப் பார்த்து கை நீட்டுகிறார். சிறுமியும் கைகுலுக்கி வாழ்த்து பெறுகிறார். ஏற்கெனவே தன் பேரக் குழந்தைகளோடு கருணாநிதி விளையாடும் காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

பெண்மையெனும் பெருவெளிச்சத்தின் விரல் பற்றி.. மங்கையர் தின வாழ்த்துக்கள்.!

Image
இன்று ( 08-03-2018) உலகம் முழுவதும் ' மகளிர் தினம் ' கொண்டாடப்பட்டு வருகிறது. கருவில் குழந்தையை தூக்கிச் சுமப்பது முதல் , காற்றில் கலந்துபோவது வரையில் தம் வாழ்வினை தம்மைச் சார்ந்தோருக்காய் ஈகம் செய்து , அவர்களின் மகிழ்ச்சியில் தாமும் சேர்ந்து மகிழ்கிற , பிள்ளைகள் பசியாற தம் பசி மறக்கிற பெண்களின் ஈகத்தினையும் , பெண்மையின் மகத்துவத்தினையும் அனைவருக்கும் உணர்த்துவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றான் தமிழ்ப் பழங்கவிஞன் ஒருவன் .. ஆம் எத்தனை சாத்தியமான வார்த்தைகள் இவை. பெண்களின் பெருமையையும் , மகத்துவத்தினையும் பறைசாற்றிடவே நாம் வணங்குகிற கடவுள்களுக்கும் , நம் தாகம் தீர்த்து உயிர்வளர்க்கிற நீர் ஆதாரங்களுக்கும் பெண்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றால் அதில் மிகையேதுமில்லை. குடும்ப கட்டமைவுகளை தூக்கிச்சுமப்பது பெண்கள் என்பது எத்துணை உண்மையோ அதே அளவு உண்மை இந்த சமூக கட்டமைவினையும் பெண்கள்தான் தூக்கிச்சுமக்கிறார்கள் என்பது. பிறருக்காக தம் கனவுகளை , லட்சியங்களை சமரசம் செய்துகொள்ளும் பெண்களே , ...

எங்கள் தங்கை அனிதாவின் பிறந்த நாள் இன்று.. காற்றில் கலைந்துபோகாத ஓவியம் அவள்.!

Image
ஆம்.. காற்றில் கலைந்துபோகாத ஓவியம் அவள் மருத்துவராகும் கனவினை காதலைப் போல் நெஞ்சில் சுமந்தவளும் அவள்.. மூட்டை தூக்கும் தகப்பனுக்கு பிறந்திட்ட ஏழைச் செல்வம் அவள்.. ஏழைக்குடியில் பிறந்தாலும் எங்கள் அனிதா எப்போதும் சறுக்கியதில்லை கல்வியில்.. ஆயிரத்தில் கட்டணம் கட்டி சிறப்பு வகுப்புக்கு சென்றவள் இல்லை ஆயினும் கல்வியில் யாருக்கும் சளைத்தவளில்லை.. பல தலைமுறை துயர்களை கல்வியால் மட்டுமே கடந்துவிட முடியுமென நம்பியவள் அவள்.. மழலை குணம் மாறிடதா அவளையும் மாய்த்துப்போட வந்தது நீட் எனும் பேரரக்கன்.. மாநில அரசின் பாடத்திட்டத்தில் இல்லாமல் எங்களுக்கு எதற்கடா மத்திய பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு.. பள்ளி இறுதி வகுப்பில் போதிய மதிப்பெண்கள் இருந்தும் ; ஆட்சியாளர்களின் அறிவு ப்  போதாமையால் பறிபோயிருக்கிறது எங்கள் அனிதாவின் பிஞ்சு உயிர்.. கல்வியையும் , மருத்துவத்தினையும் தனியார் மயமாக்கிவிட்டீர் ; அதற்கு காவு கொடுக்கிறீர்கள் எங்களை ப்  போன்ற எளியோர்களை.. எளியோர்கள்களின் துயர் அறிந்திடாத மத்திய அரசு ; யாருக்காக ஆ ள...

நல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள்.. வாழ்க்கை அழகாகும் உறவுகளே.!

Image
வாழ்வென்பது ஒருமுறை.. வாழ்த்தட்டும் நம் தலைமுறை என்ற வாசகத்தினை நாம் அடிக்கடி பள்ளி , கல்லூரி மற்றும் அரசியல் மேடைகளில் கேட்கலாம். அதற்கான விளக்கம் என்னவெனில் , பல தலைமுறைகள் வாழ்த்துகின்ற அளவினுக்கு நாம் பெயரோடும் , புகழோடும் பிறர்க்கு பயன்படுகிற சிறந்ததோர் வாழ்க்கையினை வாழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பதுதான். பிறர் போற்றுகிற வகையில் ; பார் போற்றுகிற வகையில் இந்த மண்ணில் நாம் வாழ்ந்திட , நமது இலட்சியத்தினை அடைந்திட வேண்டுமெனில் , நம்மை ஊக்கப்படுத்துகிற , சோர்ந்துவிழுகிற வேளைகளில் தாங்கிப்பிடிக்கிற உறவுகளும் , நட்புகளும் வேண்டும். அப்படியான உறவுகளும் , நட்புகளும் அமைந்துவிட்டதெனில் நிச்சயம் நம் வாழ்க்கை அழகான ஒன்றாகும். நல்ல நண்பர்கள் தானாகவே அமைந்திடுவார்கள் என்றில்லாமல் , நமது நண்பர்களை நாம் நல்லவர்களாக மாற்றிட முனைவோம். பிறரின் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயனவற்றை தூக்கி தூர எறிவோம். வாழ்வெனும் பாதை அழகாகும்.. நல்ல நட்புகள் அமைந்திட்டால்.