Posts

Showing posts from May, 2018

எஸ்.வி சேகரும்.. சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களும் - ஜனநாயகமும் ஒரு பார்வை.!

Image
தூத்துக்குடி மக்களும் - எஸ்.வி சேகரும் : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் கடந்த சில நாட்களாவே பரபரத்து கிடக்கிறது தமிழகம். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக 13 அப்பாவி பொதுமக்களை காவல்துறை காக்கை குருவிகளை சுட்டுக்கொல்வதைப்போன்று கொன்றொழித்ததை இன்னமும் நம்மால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையும் அங்கு எழவேயில்லை. அப்படியிருக்க சமூக நல்லிணக்கத்தினை காப்பதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விளக்கம் வேறு அளித்திருக்குகிறது தமிழக அரசு. இங்கே நாம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை, நடிகர் எஸ்.வி சேகரின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவுடன் பொருத்திப்பார்க்க விரும்புகிறோம். பொருத்தப்பாடு சரியில்லை என்பது நிஜமேயானாலும் இந்தியாவில் நிலவும் ஜனநாயகத்தை தோலுருத்து காட்டும் இந்த ஒப்புமை. அம்மணமாகும் ஜனநாயகம் : பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி சேகரை கைது செய்ய நீதிதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கை பிசைந்து நிற்கும் காவல்துறை, தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் நச்சு ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத...

ஆதியும் அந்தமுமாய் ஆகிப்போனவள் நீ.. அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

Image
ஆதியும் அந்தமுமாய் ஆகிப்போனவள் நீ.. அன்னையர் தின வாழ்த்துக்கள்.! பெண்ணொருத்தியின் நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பினை பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள். ஆம் , இந்த கூற்று நூறு சதமானம் உண்மையும் கூட. அத்தகைய நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பினை பிற பெண்களிடமிருந்து சிலர் பெற்றிருக்கலாம் - பெறாமலும் கூட இருக்கலாம். ஆனால் , நிபந்தனைகள் ஏதுமற்ற தாய்மையின் பேரன்பினை எவரும் பெறாமல் இருந்திருக்க முடியாது. அத்தகைய தாய்மையின் மகத்துவத்தினை உலகினுக்கு உணர்த்திடவே இன்று உலகு முழுமைக்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆம் , கருவாகி - உருவாகி , காண்போர் மெச்சிட தம் பிள்ளைகள் ஆளாகும் முன்னமிருந்தே , எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற பேரன்பினை செலுத்திவருகிற தாய்மையின் பேரன்பினுக்கு இவ்வுலகில் ஈடு - இணை ஏதுமில்லை. தம் பிள்ளைகள் மற்றும் தமைச் சார்ந்தோரின் கனவுகளுக்காய் , சந்தோஷங்களுக்காய் தன் கனவுகளை சமரசம் செய்துகொள்கிற , சந்தோஷங்களை மறந்துபோகிற தாய்மையின் பேரன்பு இவ்வுலகில் உன்னதுமானதும் - உயர்வானதும் கூட. எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நிலம் - உயிர் செழிக்க பொழியும் மழை போல அன்பை பொழிந்திடும் தாய்மார்களு...