குண்டர் சட்டத்தை உடைத்து வெளிவந்தார் - தோழர் திருமுருகன் காந்தி.!
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சியினை நடத்த மே 17 இயக்கத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசு சார்பில் இந்நிகழ்ச்சியினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழக அரசின் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தினை பாய்ச்சியது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.
நேற்று சென்னை உயர் நீதிமன்றம் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தினை நீக்கி உத்தரவிட்டதனை அடுத்து, சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையாகினர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர். அவர்களுக்கு மே 17 இயக்க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments
Post a Comment