மாநில சுயாட்சி மாநாடு ; கேரள முதல்வருக்கு அழைப்பு விடுத்தார் திருமா.!

மாநில சுயாட்சி மாநாடு ; கேரள முதல்வருக்கு அழைப்பு விடுத்தார் திருமா.!




மத்தியில் ஆட்சியுள்ள பாஜக அரசு தொடர்ச்சியாக மக்கள் நலனுக்கு, மாநில சுயாட்சி உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டுவருகிறது. நீட் விவகாரம், தமிழை வழக்காடு மொழியாக்குதல், கதிராமங்கலம்- நெடுவாசல் விவசாயிகள் வாழ்வாதார அழிப்பு பிரச்னை, இந்தி திணிப்பு, மறைந்த தலைவர்களை காவி மயமாக்க முயலுதல் போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, மாநில சுயாட்சி உரிமைகளுக்கு எதிராக தம்மை முன்னிறுத்துகிறது.


இந்நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படுகிறது. இதில் கேரளா, புதுவை மாநில முதல்வர்களும், இடதுசாரி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள கேரள முதல்வரைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார் விசிக தலைவர் திருமா. இன்று மாலை நடக்கவுள்ள மாநாட்டில் இலட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!