இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் விசிகவின் மாநில சுயாட்சி மாநாடு.!

இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் விசிகவின் மாநில சுயாட்சி மாநாடு.!



நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், புதுவை, கேரள முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

மாநில உரிமைகளும்- ஒற்றை ஆட்சி முறையும் 

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மையத்தில் கூட்டாட்சி நிர்வாகம் அமைய வேண்டுமென வரையறுத்திருந்தாலும், நடைமுறையில் மைய அரசானது ஒற்றையாட்சி தன்மைகளையே கொண்டு இயங்குகிறது. மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது. மாநில அரசுகளுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்க மறுப்பதுடன், இருப்பனவற்றையும் தட்டிப்பறிப்பதில் குறியாக இருக்கிறது.



கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் பாஜக 

மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரங்களை வழங்காதது மட்டுமின்றி, நடைமுறையில் உள்ள ஒரு சில அதிகாரங்களையும் மைய அரசு பறித்து வருகிறது. இதன்மூலம், மாநில அரசுகளை பலவீனப்படுத்தி, மையத்தில் அதிகாரங்களை குவித்து, கூட்டாட்சிக்கு வேட்டு வைத்து ஒற்றையாட்சி முறையை நிலைநாட்டுவதற்கு மையத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் துடிக்கின்றனர். இது இந்திய அரசியலமைப்புச்  சட்டத்திற்கு எதிரானதாகும். 



சனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க 

எனவேதான், மையத்தில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும் அதற்கேற்றவாறு மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் அடிப்படையில் 21ம் தேதி (நாளை) சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. 



அணிதிரளுங்கள் 

இந்த மாநாட்டில், திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர். மாநாட்டில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும்.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!