சமூகத்தை காக்க வந்த இரட்சகர்களா.. நடிகர்கள் ; சிறப்பு கட்டுரை.!
கட்டுரையாளர் : இரா.இளம்பரிதி தமிழ் தமிழக அரசியலும் - நடிகர்களும் : தமிழகத்தின் அரசியல் வரலாறு நெடுகிலும் பின்னிப்பிணைந்து உள்ளது திரையுலகம் என்றால் அதில் மிகையேதுமில்லை. அதற்கான உதாரணங்கள் என நாம் குறிப்பிட நினைத்தோமானால் திராவிட இயக்க பிதாமகர் அண்ணா துவங்கி கலைஞர், ஜெயலலிதா வரை முட்டுமல்ல தற்போது அரசியல் கால் பதிக்க எத்தனிக்கும் புதிய நடிகர்கள் வரை நாம் குறிப்பிடலாம். அட.. இதெல்லாம் தெரிந்தது தானே.. இப்போது ஏன் இவையெல்லாம் என கேட்கிறீர்களா. அதற்கான காரணங்கள் என்னிடம் இல்லாமல் இல்லை. இதோ, நாம் இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிற வேளையில் வெகு காலமாக புலி வருது.. என்ற கதையாக நீண்டுகொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகையை அவரே உறுதிப்படுத்தி, மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். ரஜினியும் - கமலும்: இன்னோர் புறமோ, திரையுலகில் தான் ரஜினிக்கு போட்டி நாயகனாக விளங்கிக்கொண்டிருந்த கமல் தானும் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்து இன்று தனது கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார். ஆக, தமிழகத்து உச்ச திரை நட்சத்திரங்கள் இருவர் அரசியல் களம் காண தயாராகிவ...