எங்கள் தங்கை டாக்டர் அனிதாவுக்கு ஓர் எளியோனின் கவிதை அஞ்சலி.!

எங்கள் தங்கை டாக்டர் அனிதாவுக்கு ஓர் எளியோனின் கவிதை அஞ்சலி.!


அரியலூர் மாவட்டத்தில்
பிறந்திட்ட தமிழினத்தின்
தங்கமகள் அவள்.. எங்கள் அனிதா
ஏழ்மையின் பிடியில் வளர்ந்தாலும் 
அவளின் கனவுகள் 
எப்போதும் உயர்ந்தவனவாகவே 
இருந்தன..
கழிப்பறை வசதி
இல்லாத வீட்டில்
ஆயிரம் கனவுகளைச் சுமந்து சிறகடித்த பறவை அவள்..
மூட்டை தூக்கும்
தகப்பனுக்கு பிறந்திட்ட
ஏழைச் செல்வம் அவள்..
மருத்துவராகிட வேண்டும்
தம்மைப் போன்ற எளியோர்க்கு சேவையாற்றிட வேண்டும்
என்பதே ஒற்றைக் குறிக்கோளாய் கொண்டிருந்த அவளுக்கு
மரணத்தை பரிசளித்தது நீட் எனும் பேர்அரக்கன்..
ஆம், மக்களுக்காக சேவையாற்றிட வேண்டியவர்கள்
தம் கடமை மறந்து போக
தம் கண் முன்னே
தனது கனவுகள் சருகாகிப்போவதனை தாங்கிக்கொள்ள
இயலாத அந்த பிஞ்சு நெஞ்சம்
தற்கொலை செய்துகொண்டது..
பள்ளி இறுதி வகுப்பில்
போதிய மதிப்பெண்கள் இருந்தும் ;
ஆட்சியர்களின் அறிவு போதாமையால்
பறிபோயிருக்கிறது எங்கள் அனிதாவின் பிஞ்சு உயிர்..
கல்வியையும், மருத்துவத்தினையும்
தனியார் மயமாக்கிவிட்டீர் ; அதற்கு காவு கொடுக்கிறீர்கள்
எங்களை போன்ற எளியோர்களை..
நீட்டுக்கு முடிவுகட்ட
உச்ச நீதிமன்றம் வரை சென்றாயே ;
அதற்காக உன் உயிரையும்
மாய்த்துக்கொள்ள எப்படி துணிந்தாயோ..
என்னென்ன நினைத்தாயோ அம்மா
உயிர் போகும் இறுதி நேரத்தில் ;
எங்களை போன்றோருக்கு கல்வியையும்
பெற்று தர இயலாதவர்களாகி போனீர்களே
என நினைத்தாயோ..
கையாலாகாதவர்களாகி போனோமே அம்மா ;
இனி கண்ணீர் வடித்து என்ன பயன்
காற்றில் கலந்து போனதே உந்தன் உயிர்..
துரோகங்களும் ; வளிகளும் இழப்புகளும்
தமிழனத்திற்கு புதிதில்லை - ஆயினும் எளிதாய்
கடந்து போக இயலவில்லை
பால் மனம் மாறாத
பிறர் துன்பம் போக்க மருத்துவராக
கனவு கண்ட
எங்கள் அனிதாவின் மரணத்தை..
இனியேனும் ஒன்றாவாய் தமிழினமே ; பகை வென்றாக.
-
இரா.இளம்பரிதி தமிழ்

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!