அதிகாரத்தினாலேயே சமூகத்தினை மாற்றிட முடியும் ; உ.தா ரோகிணி ஐஏஎஸ்

அதிகாரத்தினாலேயே சமூகத்தினை மாற்றிட முடியும் ; உ.தா ரோகிணி ஐஏஎஸ்


எளியோர்கள், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் என இன்னமும் இன்னல் படுகிற மக்கள் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட அரசுகள் திட்டங்கள் தீட்டி அதனை செயற்படுத்துவதாக கூறிக்கொண்டாலும் ஓர் பாரிய மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட்டதாக கூறி விட முடியாது.

அரசினை நடத்தி செல்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மாறுகிற அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, பணி ஓய்வு பெறுகிற வரை பதவியில் ஆட்சியாளர்களும் தான். அதாவது அரசாங்க அதிகாரிகளும் தான். இதனையே அறிஞர் அண்ணா அரசாங்க அதிகாரிகள் சரியாக செயற்படாவிட்டால் அந்த அரசாங்கத்தினால் தீட்டப்படுகிற திட்டங்கள் அனைத்துமே பாழ் என்றார். அதுவே நூறு சதவிகிதமான உண்மையும் கூட.

அரசினை நடத்தி செல்வதில் முன்னிலை வகிப்பவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள். இவர்களில் ஐஏஎஸ் அதிகாரிகளே தமது துறை சார் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயற்படுத்துபவர்கள். அத்தகைய ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர்தான் தற்போதைய சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் ரோகிணி ஐஏஎஸ்.

கடந்த சில நாட்களுக்கு முன் எவ்வித படோபடங்களும் இன்றி பதவியேற்ற அவர், பதவியேற்றவுடன் மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்த ரோகிணி அவர்களை அலைக்கழிக்காமல் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு அதிகாரிகளுக்கு பணித்ததுடன், குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக மக்களிடத்தில் மனுக்களை பெற்றார் ரோகிணி.

சேலம் அரசு மருத்துவமனை, அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களை சோதனையிட்ட அவர், அரசு மருத்துவமனை தரமுடன் இயங்க வேண்டுமெனவும், அதற்கான நடவடிக்கைகளில் தமது செயற்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அவரே சுத்தமும் படுத்தினார்.

சமூகத்தில் நிலவுகிற அவலங்களை தீர்க்க களத்தில் இறங்கிதான் போராட வேண்டுமென்றில்லை.ரோகிணி போன்று கல்வி கற்று, அரசு நிர்வாகத்தின் வழியேயும் மாற்றங்களை நிகழ்த்தலாம். வாழ்த்துக்கள் ஆட்சியர்  ரோகிணி.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!