எஸ்.வி சேகரும்.. சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களும் - ஜனநாயகமும் ஒரு பார்வை.!



தூத்துக்குடி மக்களும் - எஸ்.வி சேகரும் :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் கடந்த சில நாட்களாவே பரபரத்து கிடக்கிறது தமிழகம். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக 13 அப்பாவி பொதுமக்களை காவல்துறை காக்கை குருவிகளை சுட்டுக்கொல்வதைப்போன்று கொன்றொழித்ததை இன்னமும் நம்மால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையும் அங்கு எழவேயில்லை. அப்படியிருக்க சமூக நல்லிணக்கத்தினை காப்பதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விளக்கம் வேறு அளித்திருக்குகிறது தமிழக அரசு.

இங்கே நாம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை, நடிகர் எஸ்.வி சேகரின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவுடன் பொருத்திப்பார்க்க விரும்புகிறோம். பொருத்தப்பாடு சரியில்லை என்பது நிஜமேயானாலும் இந்தியாவில் நிலவும் ஜனநாயகத்தை தோலுருத்து காட்டும் இந்த ஒப்புமை.

அம்மணமாகும் ஜனநாயகம் :

பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி சேகரை கைது செய்ய நீதிதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கை பிசைந்து நிற்கும் காவல்துறை, தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் நச்சு ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றொழித்துள்ளது.

ஆக, அதிகார வர்க்கத்திற்கு எதிராக மட்டும் கை பிசைந்து நிற்கும் காவல்துறை, சாமானிய மக்களிடம் தனது அற்ப வீரத்தை காட்டுகிறது. இங்கே தான் அம்மணமாகிறது இந்த தேசத்தின் ஜனநாயகம்.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!