தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!
தந்தை பெரியாரின் திராவிட, பகுத்தறிவு கருத்துக்களை தன் வாழ்நாளின் இறுதிவரை உரத்து பேசியதுடன்,
அவற்றை தமது கட்சி ஆட்சி பொறுப்பேற்றதன்
பின்னர் அரசு அமைப்பின் வழியே சட்டபூர்வமாக்கினார் பேரறிஞர் அண்ணா. சுயமரியாதை
திருமணங்களை சட்டபூர்வமாக்கியது, மாதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என
பெயர் சூட்டியது உள்ளிட்டவைகள் அடக்கம். அதுவரையில், அதிகாரத்தினை நுகராமல் சமூகத்தின் கீழ்த்தளத்தில் கிடந்த பாமரர்களை
தம் கொள்கைகளின் வழியே கோபுரத்தில் ஏற்றியவர். அத்தகையாதோர் அறிவாசனின் 49 வது நினைவு நாள் இன்று.
பெரியாரிடம் பிணக்கு கொண்டு சென்னை
ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் துவங்கப்பட்ட திமுக என்ற அரசியல் - சமூக
இயக்கம் தான் இன்றைக்கும் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளது
என்றாலும் அதில் மிகையில்லை.
பண்ணையார்களின் கட்சியாய் ஆகிப்போன
காங்கிரஸிடமிருந்த ஆட்சிப்பொறுப்பினை பாமரர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றவர்
அண்ணா. திமுக என்ற இயக்கத்தின் வளர்ச்சியுடனேயே அந்த இயக்கம் எம்மக்களுக்காய்
உருவாக்கப்பட்டதோ அம்மக்களின் வாழ்வியல் வளர்ச்சியும் இருந்தது என்றால் இதில்
மிகையேதுமில்லை.
அத்தகைய அண்ணா வழி வந்த திமுக இன்றைக்கு அவர்தம் கருத்துக்களை
கவனத்தில் கொண்டு செயற்படுகிறதா என்றால் அது கேள்வுக்குரிய ஒன்றே. எனினும்,
தமிழ் - தமிழர், ஏழை - எளியோருக்காய் அண்ணா செய்த பங்களிப்பினை இந்நாளில் நினைவு
கூர்வோம்.

Comments
Post a Comment