உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!
புத்தக வாசிப்பினால் ஒருவனது வாழ்வு
செழுமையடைகிறது ; மேம்படுகிறது என்கிறான் மேலைநாட்டு
கவிஞன் ஒருவன். ஆம், எத்துணை சாத்தியமான வார்த்தைகள் இவை.
ஒருவனது வாசிப்பு பழக்கம் தன்னளவில் அவனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்த
உலகு குறித்த புரிதல் உள்ளிட்ட பல் துறை அறிவினை பெறச்செய்கிறது. அதன்
காரணத்தினாலேயே வாசிப்பு பழக்கமானது ஊக்குவிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம்
நாம்.
உலகு முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள்
உள்ளிட்ட பல்துறை அறிவுகளை மட்டுமின்றி, மனித
வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்கும், அதற்கேற்ற வகையில் நமது வாழ்வினை
தகவமைத்துக்கொள்வதற்கும் எந்த ஓர் தனி மனிதனுக்கு புத்தக வாசிப்பானது அத்தியாவசிய
தேவையாகிறது.
அந்த வகையில், அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில்
பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச்
செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும்,
வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை
ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும்
நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும்.
மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி
ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக புத்தக தினமான இன்று வாசிப்பு
பழக்கம் குறித்து மாணவர்கள், சிறியோர்கள் இடையே விழிப்புணர்வினை
ஏற்படுத்தி புத்தக வாசிப்பு குறித்த புரிதலினை அவர்களுக்கு ஏற்படுத்துவோம்.

Comments
Post a Comment