தமிழர் ஒன்று பட்டால் வென்று காட்டலாம்.. இப்போது ஐபிஎல்.. அடுத்தது காவிரி.!




உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதனை செயற்படுத்திடாத மத்திய பாஜக அரசினைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தினை அமைத்திடக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவரக்கூடிய சூழலில், மக்களின் கவனத்தினை திசை திருப்பிடக்கூடும் என்பதினால் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர் பல்வேறு அமைப்புகளும் - அரசியல் கட்சிகளும்.



ஆனால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடைபெற்றது. அதனை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சூழலில் கருத்து தெரிவித்துள்ள தமிழர் இறையாண்மை பேசிடும் அமைப்புகள் தமிழர்களின் ஓர்மையினால் மட்டுமே நமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியும்.. தற்போது ஐபிஎல் நிர்வாகத்தினை பணியவைத்ததினைபோல் ஒன்றுபட்டு காவிரியில் நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.. வெல்லட்டும் தமிழர் ஓர்மை.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!