ஆதிக்கத்திற்கு எதிரான உரிமைக்குரல் - இளம்புயல் வேல்முருகன்.!




எளிய மக்களுக்கு எதிராக ஆதிக்கத்தின் கரம் நீளும் போது அதனை எதிர்த்து மூர்க்கமாக குரலெழுப்பி எளியோர்களின் உரிமைகளை காப்பவர்களுக்கே புரட்சியாளர்கள் என்னும் அடைமொழியினை காலம் கையளித்து செல்கிறது. அந்த வகையில், தனது இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர்களாக செயலாற்றியவர். தமிழர்களின் வாழ்வாதாரத்தினை சிதைக்கும் எந்த முயற்சிக்கும் எதிர்ப்பு குரலெழுப்பும் நபர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் இளம்புயல் தி.வேல்முருகன் அவர்கள்.



சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பார்கள் என்பார்களே அப்படி பண்ருட்டி தொகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை தோற்கடித்து எம்எல்ஏவாக வெற்றிமாலை சூடிய வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சியிலும் இணைப்பொதுச்செயலாளராக விளங்கிவந்த நிலையில் அக்கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மாச்சரியங்களால் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அக்கட்சி தலைமை மேற்கொண்ட தவறான முடிவு இது எனவும், வேல்முருகனை தவறாக கணித்து விட்டது பாமக தலைமை என்றனர் அரசியல் நோக்கர்கள். ஆம், அதுவே உண்மை.

பாமகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியினை துவக்கி வெற்றிகரமாக 7 ஆண்டுகளாக நடத்திவருவதுடன், எண்ணற்ற தமிழர் வாழ்வுரிமை தளங்களில் ஓயாது செயலாற்றி வருவதுடன், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவராகவும் திகழ்கிறார்.

சாதி அரசியலை தவிர்த்து தமிழர்களுக்காக நடைபோடும் இவரின் பின்னே இளைஞர்கள் அணி திரள்வதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. தமிழர்களின் உரிமைகளை காத்திட இவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு காவிரி நீர் அளிக்கமாடீர்கள் ; சுங்க வரி மட்டும் வேண்டுமா என எளிய மக்களின் மனதிலிருந்தத, வரி கொடா இயக்கமாக்கி முன்னெடுக்கப்பட்ட போராட்டமே சான்று. (உளுந்துபேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது)

தமிழர் தம் உரிமைக்காக இடையறாது களமாடும் வேல்முருகனின் எதிர்கால திட்டங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!