மழலை மொழி பேசும்.. திராவிடத் தலைவர் கலைஞர் ; மீண்டு வா எங்கள் சூரியனே.!
தமிழகத்தின் அரசியல் வரலாற்றினை நாம் எழுதுவோமேயானால் திமுக தலைவர் கலைஞரை தவிர்த்து விட்டு ஒருபோதும் நம்மால் தமிழக வரலாற்றினை எழுதிட முடியாது. தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் பிறந்து, தனது அயராத உழைப்பினால் தமிழக வரலாற்றினையே எழுதியவர் அவர். ஆம், எதிர்ப்போரும் தவிர்த்து விட முடியாத ஆளுமை அவர்.
வயது முதிர்ச்சியினால் தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி ஓய்வெடுத்து வ்ருகிற கலைஞரின் உடல்நிலை மெல்ல சீராகி வருகிறது.
இந்நிலையில், திமுக கட்சி நிர்வாகி ஒருவரின் குழந்தைகள் திமுக தலைவர் கலைஞருடன் பேசும் காணொளி காட்சி வெளியாகி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்த வீடியோவில், சிறுமியிடம் `நான் யார்’ என்று சைகையில் கேட்கிறார் கருணாநிதி. அந்தச் சிறுமி `கலைஞர் கருணாநிதி’ என்று பதில் சொல்கிறது. பின்னர் சிறுமியைப் பார்த்து கை நீட்டுகிறார். சிறுமியும் கைகுலுக்கி வாழ்த்து பெறுகிறார். ஏற்கெனவே தன் பேரக் குழந்தைகளோடு கருணாநிதி விளையாடும் காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment