நெருப்போடு விளையாட வேண்டாம் ; மோடியை எச்சரிக்கும் மாணிக் சர்க்கார்.!



தேர்தல் ஆதாயத்திற்காக ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றதென பிரதமர் மோடியை எச்சரித்துள்ளார் திரிபுரா மாநில முதல்வர் தோழர். மாணிக் சர்க்கார். மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றன.

அந்த வகையில் திரிபுராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, நாட்டிலேயே ஏழ்மையான முதல்வராக அறியப்படுகிற மாணிக் சர்க்கார் குறித்தும், இடதுசாரி அரசு குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்தார்.




பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார். "நாடு முழுவதிலும் பாஜக அமைதியை சீர்குலைத்து வருகிறது. திரிபுராவில் ஐபிஎப்டி (திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணி) கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இது புனிதமற்ற கூட்டணி. தனி நாடு கோரும் ஐபிஎப்டி-ஐ பாஜக ஆதரிக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து திரிபுராவை வரலாற்றில் இருந்து அழித்துவிட சதி செய்கின்றன." என பாஜகவை விமர்சித்துள்ளதுடன், தேர்தல் ஆதாயத்திற்காக ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றதென பிரதமர் மோடியை எச்சரித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!