தான் அறிவற்றவர் என்பதை தினமும் நிரூபிக்கும் அரசியல் பிரமுகர்.!
புத்தக வெளியீட்டு விழா
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த இளைய சங்கராச்சாரி
விஜயேந்திரன், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து
இசைக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்திருந்தது தமிழக
அரசியல் தளத்தில் பலத்த அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சங்கராச்சாரியின் இத்தகைய
செயலை கண்டித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டுவருகின்றனர் தமிழக அரசியல்
தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும்.
இந்நிலையில், தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரான கலைஞர் விழா ஒன்றில்
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த
காணொளி காட்சியினை வெளியிட்டுள்ளார் தமிழகத்தில் கால் பதிக்க இயலாத கட்சியின்
தலைவர்களுள் ஒருவர்.
வயது முதிர்ந்து, நிற்க இயலாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது அன்றாட பணிகளை
கவனிக்கும் கலைஞரையும், தன்னால் இயன்றும் தமிழ்த்தாய்
வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் நாங்கள் எழுந்து நிற்பது மரபல்ல என
விளக்கமளிக்கும் மடாதிபதியையும் எப்படி ஒருசேர ஒப்புமைக்கு உள்ளாக்க முடிகிறது
இவர்களால்.
காணொளி காட்சியை வெளியிட்ட
அன்பிற்குரிய அரசியல் தலைவரே, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய
மதிப்பளிப்பது குறித்து நீங்கள் தமிழர்களுக்கோ, கலைஞருக்கோ பாடம் எடுக்க தேவையில்லை. உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள
முனையுங்கள். இல்லாவிடில் திருத்தப்படுவீர்கள்.


Comments
Post a Comment