சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!


காதல் என்ற பெருஉணர்வு மட்டும் இங்கு இல்லாது போயிருந்தால் இந்த உலகம் சுழல்வது என்றோ நின்றுபோயிருக்கும். அப்படியான காதலை, காதலர்களை சாதியின் பெயராலும் ; மதத்தின் பெயராலும் இணைந்து வாழ்ந்திட விடாமல் அவர்களின் மீது வன்முறையை ஏவி விடுவது தொடர்ச்சியாக தமிழகத்தில் அரங்கேறிவருகிறது. 

அதற்கு உதாரணங்களாக, தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ், உடுமலைபேட்டை சங்கர் என்ற அப்பாவி உயிர்கள் பல இறையாகிவருவதும் இங்கு நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

இந்நிலையில்தான், கடந்த வருடம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கௌசல்யா என்ற வேற்று சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சங்கரின் கொலை வழக்கானது, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சங்கர் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.



கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 9 வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11 வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியான தீர்ப்பினை வழங்கியது நீதிமன்றம். மேலும், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட வரலாற்று தீர்ப்பு குறித்து இடதுசாரிகள், தலித்திய இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவர்களைத் தவிர்த்து, அரசோ, தம்மை சனநாயக சக்திகள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் திமுக உள்ளிட்ட கட்சிகளோ வாய் திரவாமல் மௌனம் காத்துவருகின்றன.

அதற்கான காரணம் யாதெனில், குறிப்பிட்ட சாதி சமூகங்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாதென்ற அப்பட்டமான தேர்தல் அரசியல் அணுகுமுறைதான்.

பெரியார் வழி வந்த இயக்கங்கள் தேர்தல் அரசியலுக்காக மேற்கொண்ட சமரசங்கள் விளைவாகவே இந்த மண்ணில் இன்னமும் சாதிய கொடுமைகள் நிகழ்ந்துவருகிறது. 

நடிகர் ரஜினியின் பிறந்த நாளிற்கு அரசு குறிப்பின் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் துணை முதல்வரால், மேற்கண்ட தீர்ப்பு குறித்தோ, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஓகி புயலால் அடைந்த துயர் குறித்தோ, அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்தோ ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை.


ஆக, தேர்தல் அரசியலை தவிர்த்து இவர்களுக்கு சமூக மேம்பாடு குறித்து எவ்வித ஈடுபாடும் இல்லை என்பதுவே கசப்பான உண்மை. எனவே, இவர்களை இனியும் நம்பிக்கிடக்காமல் விழித்துக்கொள்ள வேண்டியது மக்கள் தான்.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!