கேரள அரசின் அடுத்த அதிரடி.. தலித், ஹரிஜன் வார்த்தைகளை பயன்படுத்த தடை.!

கேரள அரசின் அடுத்த அதிரடி.. தலித், ஹரிஜன் வார்த்தைகளை பயன்படுத்த தடை.!


பிறப்பால் உயர்வு, தாழ்வு பாராட்டுதல் குற்றம் என்பது மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் அச்சடிப்பட்டிருக்கிறதே தவிர,  அதனை நடைமுறையில் செயற்படுத்த இடதுசாரிகள், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் இன்னும் பல முற்போக்கு இயக்கங்களைத் தவிர வேறெந்த தேர்தல் அரசியல் கட்சிகளும் முனைந்ததாக தெரியவில்லை.


அந்த வகையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கலாம் என்ற சட்டத்தினை நிறைவேற்றிய திமுகவின் சட்டத்தினையும் கூட முடக்கினர் சாதிய மனோபாவமுள்ள அமைப்பினர்.


இந்த நிலையில், மத்தியில் இந்துத்துவ பாஜக அரசு அமைந்து தொடர்ச்சியாக மதக்கொள்கைகளை திணித்து வருகிற சூழலில், கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையில் அமைந்துள்ள இடதுசாரிகளின் அரசு பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த 36 நபர்களை அர்ச்சகர்களாக்கி அதிரடி காட்டியது மட்டுமின்றி, தேசத்திற்கே முன்னுதாரணமாக அமைந்தது.


அதன் தொடர்ச்சியாக, தற்போது கேரள அரசு சார்பில் அதிகாரபூர்வமாக தலித், ஹரிஜன் போன்ற சொற்களை பயன்படுத்தக்கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை எளியோர்களிடம் - சமூக மாற்றத்தினை விரும்புவோர் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

http://sirumazhai.blogspot.in/2017/10/blog-post.html

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!