கருவறைக்குள் முதல் தலித் அர்ச்சகர் ; சாதித்த கேரள அரசு.!
கருவறைக்குள் முதல் தலித் அர்ச்சகர் ; சாதித்த கேரள அரசு.!
மானுடம் இங்கே சாதியத்தினாலும், மதத்தினாலும் மாசு படுத்தப்பட்டுக்கொண்டிருக்கையில் அதன் வழியாகவே எளிய மனிதர்கள் மீது சுமத்தப்படுகிற இழிவுகளை துடைத்தெறிவதற்கான முதல் படியினை துவங்கியுள்ளது கேரளத்தினை ஆண்டுவருகிற பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகளின் அரசு.
ஆண்டாண்டு காலம் சாதி, மதமென கூறி ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை கோவிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்திடும் மனிதர்களாக மாற்றிக்கொண்டுள்ளது, இறை - மத நம்பிக்கை அற்ற இடதுசாரிகளின் அரசு. காரணம் எந்த தளத்திலும் மக்களை பிறப்பின் வழி பாகுபடுத்தப்படக்கூடாது என்ற கொள்கையின் வெளிப்பாடுதான்.
கேரளாவில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ் இயங்கும் சபரி மலை ஐயப்பன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடந்த வாரம் பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், திருவில்லா அருகே உள்ள முள்ள மணப்புரம் சிவன் கோயிலில் அம்மாநில முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் என்பவர் தனது அட்சகர் பணியை தொடங்கினார். தன் குருவிடம் ஆசி பெற்றபின் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசைகள் செய்தார்.
மத நம்பிக்கை இல்லாவிட்டாலும் மானுட சமத்துவத்திற்காக களமாடும் இடதுசாரிகளின் எதிர்கால முயற்சிகள் யாவும் வெற்றியடைய எம் வாழ்த்துக்கள்.


Comments
Post a Comment